இராசிபுரம் அருகே ஊராட்சி சாலை பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரடி ஆய்வு
இராசிபுரம் அருகே ஊராட்சி சாலை பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரடி ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருமாகவுண்டம் பாளையம் ஊராட்சியில் சாலை புதுப்பிக்கும் பணிக்காக தற்போது நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்பகுதியில் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றாமல் சாலை அமைப்பதால் சாலை குறுகலாக உள்ளதாக பலமுறை புகார் கொடுத்தும் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றாமல் சாலை அமைக்கும் பணி நடைபெருவதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலை அமைக்க கூடாது என பொதுமக்கள் கடந்த திங்கள்கிழமை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இ
தைத்தொடர்ந்து பொதுமக்களை சந்தித்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் எஸ்.உமா அவர்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சிக்கு தான் நேரடியாக வந்து ஆய்வு செய்வதாக உறுதியளித்தார். இந்நிலையில் இன்று அப்பகுதியில் பெரியகவுண்டம்பாளையம் ஊராட்சி பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் மற்றும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ள பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு பகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை பொதுமக்கள் மற்றும் ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்களை வைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு எட்டப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். மேலும் இப்பகுதியில் இரு தரப்பினரும் அதிக அளவில் கூடியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது தொடர்ந்து காவல்துறை மற்றும் அதிகாரிகள் அதிக அளவில் அந்த பகுதியில் இருந்தனர். மேலும் ஆட்சியர் ஆய்வு செய்து இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக தீர்த்து வைக்கிறேன் என்று கூறியதை எடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.