இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய தாமதம் - உறவினர்கள் சாலை மறியல்

இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய தாமதம் செய்ததால், உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-11-29 14:59 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி மேல தெருவை சேர்ந்தவர் திருமலை. இவர் தனியாக வசித்து வந்த நிலையில் கழுத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். மேலும் உடல் அழகிய நிலையில் இருந்துள்ளது.

அங்கு வந்த போலீசார் உடல்நலக் குறைவால் இறப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர். ஆனால் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் பிரேத பரிசோதனை செய்ய வலியுறுத்தினர். இதையடுத்து உடலை சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பரிசோதனை நடக்க இருந்த நிலையில் உடல் அழுகி விட்டதால் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் எனக் கூறி உடலை கேட்டனர்.

ஆனால் அதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டதால் ஆத்திரமடைந்த உறவினர்கள் நான்கு சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமரசத்தையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Tags:    

Similar News