வீரகனூர்போலீஸ் ஸ்டேஷனில் டிஎஸ்பி வருடாந்திர ஆய்வு
வீரகனூர்போலீஸ் ஸ்டேஷனில் டிஎஸ்பி வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி, வீரகனூர் போலீஸ் ஸ்டேஷனில் ஆத்தூர் டிஎஸ்பி நாகராஜன் வருடாந்திர ஆய்வு பணி மேற்கொண்டார். கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனில் உள்ள ஆவணங்களை சரிபார்த்து, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.
பணியில் இருக்கும் காவலரிடம் குறைகளை கேட்டறிந்தார். வீரகனூர் போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு மேற்கொண்ட போது, காவல் நிலையத்தில் பதிவேடுகளை ஆய்வு செய்து, காவல் நிலையம் முழுவதும் தூய்மை பணியை ஆய்வு செய்தார். காவல் நிலையத்தில் நிலுவை வழக்கு களை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார்.
காவல் நிலையத்துக்கு புகாரளிக்க வரும் பொது மக்களை கனிவாக நடத்த வேண்டும் கூறினார் வீரகனூர் போலீஸ் ஸ்டேஷனில், இரு தரப்பினரிடமும் முறையாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து, வீரகனூர், கெங்கவல்லி காவல் நிலையத்தில் டிஎஸ்பிநாகராஜன் மரக்கன்று களை நட்டார்.
இந்த ஆய்வின் போது, வீரக னூர் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன், எஸ்ஐ அந்தோணி மைக்கேல், நிர்மலா, பெரியண்ணன் மற்றும் போலீசார் உட னிருந்தனர்.