புதுக்கோட்டையில் மாட்டு வண்டி, குதிரை வண்டி சைக்கிள் பந்தயம்

Update: 2023-12-03 10:34 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ்நாடு மாநில இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் Dr. முத்துராஜா ஏற்பாட்டில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம் குதிரை வண்டி பந்தயம் சைக்கிள் பந்தயம் ஆகிய மூன்று நிகழ்வுகள் இன்று நடைபெற்றன

புதுக்கோட்டை மச்சுவாடி ஜீவா நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து துவங்கிய இப்ப போட்டிகள் பெரிய மாடு சின்ன மாடு பெரிய குதிரை சின்ன குதிரை சைக்கிள் பந்தயம் என பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன பெரிய மாடு பிரிவில் 10 மைல் தூரத்தில் சென்று வரும் போட்டியும் சின்ன மாடு போட்டி 8 மைல் தூரம் சென்று திரும்பி வரும் போட்டியாகவும் பெரிய குதிரை 10 மைல் தூரத்திற்கு சென்று வரும் போட்டியாகவும் சின்ன குதிரை 8 மைல் தூரத்திற்கு சென்று திரும்பும் வகையிலும் போட்டிகள் நடத்தப்பட்டன

15 வயதுக்கு உட்பட் வீரர்களுக்கான சைக்கிள் போட்டி 5 மைல் தூரம் சென்று திரும்பும் வகையில் போட்டி நடத்தப்பட்டன முதல் பரிசாக 50,000 ரூபாயும் 20ம் பரிசாக 40,000 ரூபாயும் மூன்றாம் பரிசாக Rs 30000 நான்காம் பரிசாக 20000 ரூபாயும் 5 பரிசாக 5000 ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது இப்போ போட்டிகளை தமிழ்நாடு மாநில சட்டத்துறை அமைச்சர் S. ரகுபதி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் MP MM அப்துல்லா உள்ளிட்டோர் போட்டியை துவக்கி வைத்தனர் இன்று நடைபெற்ற போட்டியை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாலை ஓரத்தில் நின்று போட்டியை கண்டு ரசித்தனர்

இன்று நடைபெற்ற இப்போட்டியில் நகர்மன்ற உறுப்பினர் பால்ராஜ் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்களும் முள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆதிஸ்வரன் துணைத் தலைவர் நாகராஜன் உள்ளிட்ட ஊராட்சி மன்ற பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News