ஜெயலலிதா படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
ஜெயலலிதா படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-05 16:15 GMT
ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 7-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாநகராட்சி அலுவலகம் எதிரே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் அவை தலைவர் பழனிச்சாமி, கே.என். விஜயகுமார் எம்எல்ஏ, முன்னாள் எம்.எல்.ஏ.கள் சு.குணசேகரன், என்.எஸ்.என் நடராஜன், திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் கவுன்சிலர் அன்பகம் திருப்பதி, பகுதி செயலாளர் கண்ணப்பன், அம்மா பேரவை துணைச் செயலாளர் ஆண்டவர் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.