சிவகங்கை மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகள்; மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பல லட்ச ரூபாயில் பணிகள் நடைபெற்று வருகின்றன

Update: 2023-12-09 16:23 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில், சாக்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகள் மற்றும் காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகள் ஆகியவைகளில் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து இன்று (09.12.2023) மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் லால்வேனா களஆய்வுகள் மேற்கொண்டார்.

காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.96.94 இலட்சம் மதிப்பீட்டில் கல்லல் - மதகுபட்டி சாலையிலிருந்து பொய்யாமொழிப்பட்டி வழியாக குலவனேந்தல் வரை அமைக்கப்பட்டு வரும் 22 கி.மீ தூர சாலை பணிகள் தொடர்பாகவும், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஓ.சிறுவயல் பகுதியுள்ள அரசினர் குழந்தைகள் இல்லத்தின் செயல்பாடுகள் குறித்தும், சங்கராபுரம் ஊராட்சிக்குட்பட்ட என்.ஜி.ஓ காலனியிலுள்ள நியாய விலை கடையின் செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வரும் குடிமைப்பொருட்களின் தரம், இருப்பு ஆகியவைகள் குறித்தும், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் விளாரிக்காடு தரிசு நில தொகுப்பு குழு மற்றும் சிறுகப்பட்டி தரிசு நில தொகுப்பு குழு ஆகியவைகள் மூலம் மா ஒட்டுக்கன்றுகள் பயிரிடப்பட்டு அதன் மூலம் பயன்பெற்று வரும் விவசாயிகளின் பயன்கள் குறித்தும், புதுவயிலில் 15 வது மத்திய நிதிக்குழு மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் அரசு சமூக நல நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் வட்டார பொது சுகாதார கட்டிட கட்டுமானப் பணிகள் குறித்தும், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் செயல்பாடுகள் மற்றும் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மேற்கொண்ட மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும், காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபம் வளாகத்தில் அமைந்துள்ள போட்டித் தேர்வுகளுக்கான கல்விமையத்தின் செயல்பாடுகள் மற்றும் இளைஞர்களுக்கான வழிகாட்டுதல் முறைகள் குறித்தும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுடன் , மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் கள ஆய்வுகள் மேற்கொண்டார்.

Tags:    

Similar News