தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாற்றுத்திறனாளிகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2023-12-11 13:32 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தேனி மாவட்டத்தினை சேர்ந்த மாற்று திறனாளிகள் தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாநில நல வாரிய உறுப்பினர் கருப்பையா தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

.இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்குவதற்கு எவ்வித நடவடிக்கை இல்லை என்றும் எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்க கோரியும் ,மாற்றுத்திறனாளிகளுக்கு தர வேண்டிய கைப்பேசியினை தராமல் உள்ளதால் கைப்பேசியினை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் ,மாற்று திறனாளிகள் தினத்தில் அனைவருக்கும் சான்றிதழ் வழங்காமல் அறக்கட்டளை நபர்களுக்கு மட்டும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதை கண்டித்தும், மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் தொடர்ந்து பத்து

வருடத்திற்கு மேல் பணியாற்றி வரும் அலுவலர்களை பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியும்,சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியிலிருந்து வழங்கப்படும் மாற்றுத்திறனாளிக்கான நான்கு சக்கர வாகனங்கள் இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை என்றும் சரியான முறையில் மாற்று திறனாளிகளுக்கு நான்கு சக்கர வாகனங்கள் வழங்க வேண்டும் என்று கூறியும், உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Tags:    

Similar News