சங்கரன்கோவிலில் எம்எல்ஏ பரிசு வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது
சங்கரன்கோவிலில் எம்எல்ஏ பரிசு வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-11 16:24 GMT
பரிசு வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்
தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கபடி போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் 36 அணிகள் கலந்துகொண்ட போட்டியில் முதல் இடத்தை கரிவலம் கிரிக்கெட் அணியும், 2வது இடத்தை தென்காசி வடக்கு மாவட்ட திமுக ஸ்டோன் ரைடர் அணியும் இடம் பெற்றது. இந்த போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா கோப்பை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.