பைக்கில் சென்றவர்கள் வழுக்கி விழுந்ததால் பரபரப்பு!
தூத்துக்குடி 3வது கேட் மேம்பாலத்தில் இன்ஜின் ஆயில் சிதறி கிடப்பதால் இருசக்கர வாகனங்கள் வழுக்கி கீழே விழுந்து விபத்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.;
Update: 2023-12-23 11:40 GMT
வழுக்கி விழுந்து விபத்து
தூத்துக்குடி 3வது கேட் மேம்பாலத்தில் இன்ஜின் ஆயில் சிதறி கிடப்பதால் இருசக்கர வாகனங்கள் வழுக்கி கீழே விழுந்து விபத்து நடந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் உள்ள 3வது ரயில்வே கேட் மேம்பாலத்தின் மீது இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் இஞ்சின் ஆயில் பெட்டியை உடைத்து கீழே விழுந்து உடைந்தது. இதனால் ஆயில் சாலையில் சிதறியதால் அந்த சாலை வழியாக வந்த இருசக்கர வாகனங்கள் வழிக்கு கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்போது அந்த பகுதியாக சென்ற இருவர் அந்த பகுதியில் தனது வாகனத்தை மறைத்து வைத்து இருசக்கரத்தில் வாகனத்தில் செல்பவர்களை மெதுவாக செல்லும்படி கூறிய போது அந்த வழியாக வந்த மூன்று குண்டர்கள் ஏன் போக்குவரத்துக்கு இடைவு செய்கிறார்கள் என்று அவர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் குடும்பத்துடன் சென்ற ஒருவர் வழிக்கு கீழே விழுந்ததால் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் 3வது கேட் மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.