எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்!

Update: 2024-01-22 14:45 GMT
கூட்டத்தில் பேசும் முன்னாள் அமைச்சர் 

 மறைந்த முதல்வரும் அதிமுக நிறுவனமான எம்ஜிஆர் 107வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்றது இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் நடிகை விந்தியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்ஜிஆரும் அவரால் உருவாக்கப்பட்ட இரட்டை இலை எங்கே இருக்கிறாயோ அதுதான் உண்மையான அதிமுக எம்ஜிஆர் இரட்டைகளையும் சரி நம்மோடு தான் உள்ளது எனவே நாம் தான் உண்மையான அதிமுக இங்கிருந்து சென்றவர்கள் விரைவில் திரும்பி வருவார்கள்.

   தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் மீது அதிக அளவில் அதிருப்தி அதிக அளவில் ஏற்பட்டுள்ளது மக்கள மட்டுமல்லாது தொழில் செய்பவர்கள் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட அனைவரும் அதிமுக தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று வெளிப்படையாக கூற தொடங்கி விட்டனர்.

நம்மை அமர வைக்க மக்கள் தயாராகி விட்டனர் வரும் நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி அடுத்ததாக வரும் சட்டமன்ற தேர்தல் அதிமுக அமோக வெற்றி பெறுவார்.

Tags:    

Similar News