சிறுமலையில் கூடுதல் பள்ளி கட்டடத்திற்கு பூமி பூஜை
சிறுமலையில் கூடுதல் பள்ளி கட்டடத்திற்கு பூமி பூஜை நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-26 16:28 GMT
பூமி பூஜையில் கலந்து கொண்டவர்கள்
திண்டுக்கல் அருகே சிறுமலையில் கூடுதல் பள்ளி கட்டடத்திற்கு பூமி பூஜை நடந்தது. திண்டுக்கல் ஒன்றியம் சிறுமலை ஊராட்சிக்கு உட்பட்ட பழையூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் கூடுதல் வகுப்பறை கட்டிடத்திற்கான பூமி பூஜை நடந்தது.
இதில் முன்னாள் நத்தம் தொகுதி எம்.எல்.ஏ ஆண்டி அம்பலம்,ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா வெள்ளிமலை,துணைத் தலைவர் வெற்றிவேல்,கட்டிட ஒப்பந்ததாரர் சரவணகுமார்,ஊராட்சி செயலர் முத்துக்குமார் மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.