துணை சுகாதார நிலையத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

32ஆண்டுகளாக இருக்கும் துணை சுகாதார நிலையத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

Update: 2024-02-20 18:24 GMT

சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சிக்குட்பட்ட 11 வது வார்டு கஸ்தூரிப்பட்டி பகுதியில் கடந்த 1992 ம் ஆண்டு முதல் துணை சுகாதார நிலையம் தொடங்கி 32 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இந்த சுகாதார நிலையத்தில் கஸ்தூரிப்பட்டி , மூலக்காட்டானூர், கட்டையனூர், பொன்னையாகாடு, செட்டிபட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பகுதியைச் கர்ப்பிணி பெண்கள் பரிசோதனை செய்வதற்காகவும், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்காகவும் அன்றாடம் வந்து செல்கின்றனர்.

இங்கு செவிலியர் ஒருவர் தங்கி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சுகாதார நிலையம் போதிய பராமரிப்பின்றி தற்போது கட்டிடம் வலுவிழந்ததோடு கட்டிடத்தின் மேற்கூரை காங்கிரீட் பெயர்ந்தும் கட்டிடத்தை சுற்றி பல இடங்களில் சுவர்கள் சேதமாகி விரிசல்கள் ஏற்பட்டும் மழைக்காலங்களில் மழைநீர் கசிந்து மேற்கூரையின் கான்கிரீட் தளம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் நிலையில் உள்ளதால் பணிபுரியும் செவிலியர் மற்றும் நோயாளிகளும் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் எனவே துணை சுகாதார நிலையத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News