தடுமாறி கீழே விழுந்த தொழிலாளி பலி
மயிலாடுதுறை அருகே பெருஞ்சேரி கிராமத்தில் வீட்டில் தடுமாறி கீழே விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-03-03 05:23 GMT
மயிலாடுதுறை அருகே உள்ள பெருஞ்சேரி வடக்குத் தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் மகன் விஸ்வநாதன்(55). கூலித்தொழிலாளி, இவர் அதே பகுதியில் உள்ள வைத்தியலிங்கம் என்பவரது வீட்டில் கடந்த ஒருமாதமாகத் தங்கி வேலை பார்த்துவந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று இரவு உணவு சாப்பிட்டுவிட்டு கை கழுவுவதற்காக கொல்லைபுறம் சென்றபோது கால்தவறி கீழே விழுந்து மயக்கமடைந்துவிட்டார், ஆட்டோ மூலம் விஸ்வநாதனை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்,
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விஸ்வநாதன் கொண்டுவரும் வழியிலேயே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இதுகுறித்து பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறை,தொழிலாளி பலி,
Mayiladuthurai,Worker died