அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்திய வேளாண் கல்லூரி மாணவ- மாணவிகள்.

அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்திய வேளாண் கல்லூரி மாணவ- மாணவிகள்.

Update: 2024-03-08 12:10 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்

கரூர் மாவட்டத்தில், புதிதாக வேளாண் கல்லூரி துவக்கப்பட்டது. ஆனால், கல்லூரிக்கு இன்னும் இடம் தேர்வு செய்யப்படவில்லை. கட்டிடம் கட்டப்படவில்லை. கல்லூரி திறந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. வேளாண் கல்லூரி, கரூர் மாநகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தை அருகே மாநகராட்சி சமுதாயக்கூடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

வருடம் தோறும் கல்வி ஆண்டில் மாணவ- மாணவிகள் கல்லூரியில் சேர்ந்து வருவதால், தற்போது மூன்றாம் வருட மாணவ- மாணவியரை போதிய இடவசதி இல்லாததால், கோவை மாவட்டத்தில் உள்ள வேளாண் கல்லூரியில் தங்கிப் படிக்க ஏற்பாடு செய்துள்ளனர். தற்போது பயின்று வரும் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவியர்,கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள விடுதியில் தங்கி கல்லூரியில் பயின்று வருகின்றனர். மாணவிகளுக்கு கல்லூரியிலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள விடுதியிலும் போதிய அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை எனக் கூறி இன்று கரூர்- திருச்சி சாலையில் திடீரென உழவர் சந்தை அருகே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி மண்டல தலைவர் கனகராஜ் மற்றும் கோல்ட் ஸ்பாட் ராஜா ஆகியோர் மாணவ -மாணவியரிடம் சமாதானம் பேசி கல்லூரிக்கு அழைத்துச் சென்றார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பும் காணப்பட்டது

Tags:    

Similar News