பைக் விபத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு!
விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.;
Update: 2024-03-18 04:45 GMT
காவல்துறை விசாரணை
விராலிமலை: திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஆலம்பட்டி ரோடு காவேரி சாலையை சேர்ந்தவர் மாரிமுத்து (46). இவர் கடந்த மாதம் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ராஜ நாயக்கன்பட்டி அருகே பைக்கில் சென்றபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து காயமடைந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாரிமுத்து நேற்று உயிரிழந்தார். விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.