திருப்பத்தூர் மாவட்டம் முதன்மை நீதிமன்றமாக மாற்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்ப

திருப்பத்தூர் மாவட்டம் முதன்மை நீதிமன்றமாக மாற்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு!மற்றும் சாலை மறியல்;

Update: 2024-03-21 09:40 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்

 திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைந்துள்ளது. இதனை மாவட்டம் முதன்மை நீதிமன்றமாக மாற்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

இதன் காரணமாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தமிழ்ச்செல்வி திருப்பத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு வருகை புரிந்து மாவட்ட நீதிமன்றம் மற்றும் மாவட்ட முதன்மை நீதிமன்ற திறப்பதற்க்கு முறையான முகாந்திரம் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

அதன் அடிப்படையில் அதற்கான முகாந்திரங்கள் இருப்பதின் காரணமாக வருகின்ற மார்ச் 30க்குள் மாவட்ட நீதிமன்றம் மற்றும் மாவட்ட முதன்மை நீதிமன்றம் திற்பதாக உறுதியளித்திருந்தார். அதன் காரணமாக வாணியம்பாடியில் மாவட்ட நீதிமன்ற அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டதாக தெரிகிறது எனவே அதனை எதிர்த்து இன்று திருப்பத்தூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஞான மோகன் தலைமையில் சுமார் 150க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் முன்பு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

   அங்கிருந்து திடீரென ஜின்னா ரோடு பகுதியில் திருப்பத்தூர் வழியாக கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர் அதனைத் தொடர்ந்து அங்கிருந்து அங்கிருந்து ஊர்வலமாக வந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்தனர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜை சந்தித்து நேரில் முறையிட்டனர். தற்போது தேர்தல் நேரம் என்பதால் தங்களிடம் என்ன மனமும் பெறக்கூடாது எனவே உங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படும் என அனைவரும் கலந்து சென்றனர் இதன் காரணமாக சிறிது பெரும் பரபரப்பு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News