மதுராந்தகம் அருகே கடலில் குளிக்க சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி பலி
மதுராந்தகம் அருகே கடலில் குளிக்க சென்ற மாணவர்கள் கடலில் மூழ்கி பலியானர்.
By : King 24X7 News (B)
Update: 2024-03-26 12:51 GMT
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த செய்யூரில் தனியார் பள்ளியில் படித்த மாணவர்கள் பிளஸ்-1 தேர்வு எழுதி நேற்று முடிவடைந்த நிலையில் இன்று சுமார் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கிழக்கு கடற்கரை சாலை உள்ள பனையூர் குப்பத்தில் கடலில் குளிக்கச் சென்றபொது கடலில் மூழ்கி பவுஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் மற்றும் முகமது முசாதிக் இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி பலியாகினார்கள்.
தகவல் அறிந்து வந்த செய்யூர் காவல்துறையினர் பிரதத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. பள்ளி படிக்கும் மாணவர்கள் கடலில் மூழ்கி இருவர் பலியான சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..