கிறிஸ்தவ போதகர்களுக்கு மிரட்டல் பாஜக பிரமுகர் மீது புகார்

நெற்குன்றம் பகுதியில் கிறிஸ்தவ போதகர்களுக்கு மிரட்டல் பாஜக பிரமுகர் மீது பெறப்பட்ட புகாரை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.;

Update: 2024-04-04 17:05 GMT

புகார்

நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் யோவான்(29). இவர் நேற்று கோயம்பேடு காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது, சென்னை நெற்குன்றம் பகுதியில் கடந்த மாதம் 29ம் தேதி, ஊழியம் செய்வதற்கு கிறிஸ்தவர்கள் சென்றபோது எங்களது வாகனத்தை வழிமறித்து பிச்சாண்டி(எ) ஜெண்டில்மேன் என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து எங்களை ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன் மத கலவரத்தை தூண்டும் வகையில் மிரட்டினார்’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

எனவே, கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசிய பாஜக பிரமுகர் பிச்சாண்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். அத்துடன் அதற்கான வீடியோ ஆதாரத்தையும் சமர்ப்பித்துள்ளார். இதுதொடர்பாக கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.‘பாஜக பிரமுகர் கிறிஸ்தவர்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசி மிரட்டினார். இதுதொடர்பாக கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பாஜ பிரமுகர் மதவெறியை தூண்டும் வகையில் செயல்பட்டு வருவதால் கிறிஸ்தவர்கள் இடையே மனவேதனை உண்டாக்கி உள்ளது. எனவே பாஜக பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கிறிஸ்தவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News