ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம்
தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் அமைந்துள்ள ரோட்டரி மண்டபத்தில், ரோட்டரி சங்கம் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
தர்மபுரி ரோட்டரி சங்கம் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை தர்மபுரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் முற்றிலும் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று ரோட்டரி சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் கண்ணில் புரை,உண்டாகுதல் கண்ணில் சதை வளர்ச்சி,கிட்ட பார்வை, தூரப்பார்வை,கண்ணில் நீர் அழுத்தம்,மாலைக்கண், மற்றும் கண் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளும் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது.
ரோட்டரி சங்க இயக்குனர் டி என் சி மணிவண்ணன் ரோட்டரி சங்க தலைவர் தட்சிணா மூர்த்தி,சக்திவேல் .குணசீலன் ,சேகர்,அப்பாவு, கிருஷ்ணன், புருஷோத்தமன், விவேகானந்தன், வேடியப்பன், ரவி, கண்ணன், கருணா கரன்,ரோட்டரி மிட்டவுன் சங்கத் தலைவர் இளவரசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் கண் அறுவை சிகிச்சைக்கு 360 பேர் தேர்வு செய்யப் பட்டனர். இவர்கள் நேற்று மாலை கோவை அரவிந்த் கண் மருத்துவ மனைக்கு அறுவை சிகிச்சைகாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
தர்மபுரி, இலவச கண் சிகிச்சை முகாம், ரோட்டரி கிளப்