கள்ளக்குறிச்சியில் திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம் !

கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றிய பகுதியில் தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை எடுத்துரைத்து வேட்பாளர் மலையரசன் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Update: 2024-04-10 05:13 GMT

 தி.மு.க

கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றிய பகுதியில் தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை எடுத்துரைத்து வேட்பாளர் மலையரசன் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் மலையரசன், நேற்று கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றிய கிராமங்களில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தென்கீரனுார், விளம்பார், மலைக்கோட்டாலம், நிறைமதி, நீலமங்கலம், மாடூர், வீரசோழபுரம், வி.பாளையம், பெருவங்கூர், சிறுவங்கூர், ரோடுமாமந்துார், கா.மாமனந்தல் உட்பட பல்வேறு கிராமங்களில் வேட்பாளர் மலையரசனுக்கு கிராம பெண்கள் பலர் ஆரத்தி வரவேற்றனர்.

அப்போது, தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு வரும் மகளிருக்கான உரிமைத் தொகை, மகளிருக்கு இலவச பஸ் வசதி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை உட்பட பல்வேறு நலதிட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதி பொறுப்பாளர் மாசிலாமணி, தெற்கு மாவட்ட அவை தலைவர் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், தலைமை செயற்குழு உறுப்பினர் முருகன், முன்னாள் துணை சேர்மன் முரளி, வி.சி., மாவட்ட செயலாளர் மதியழகன், காங்., முன்னாள் மாவட்ட தலைவர் இளையராஜா,மாவட்ட துணை செயலாளர் ராமமூர்த்தி உட்பட தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News