சிறுமியை கடத்திய ஒடிசா இளைஞர்
சிறுமியை கடத்திய ஒடிசா வாலிபர் சிக்கினார்;
By : King 24X7 News (B)
Update: 2024-05-04 15:38 GMT
கோப்பு படம்
செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சேகர் மண்டல் (21) என்பவர் வேலை செய்து வந்தார். இவர், திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி, 14 வயது சிறுமியை, கடந்த மாதம் 28ம் தேதி, ஒடிசாவிற்கு கடத்திச் சென்றார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர், செங்குன்றம் போலீசில் புகார் செய்தனர். அதைத்தொடர்ந்து, ஏப்.30ம் தேதி இரவு ஒடிசா சென்ற போலீசார், சிறுமியையும், அவரை கடத்திச் சென்ற சேகர் மண்டலையும், நேற்று காலை சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.