முன்னாள் முதல்வர் பழனிச்சாமி பிறந்த நாளையொட்டி நலதிட்ட உதவிகள்
கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி பிறந்த நாளையொட்டி நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில் அதிமுக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய புதுப்பட்டினம் ஊராட்சி கழகம் சார்பில் கழக பொதுசெயலாளரும், முன்னாள் முதல்வரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமியின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதுப்பட்டினம் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவரும் , ஒன்றிய மகளிரணி தலைவியுமான டாக்டர் காயத்ரி தனபால் ஏற்பாட்டில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான எம் தனபால் தலைமையில் நடைபெற்றது,
விழாவில் கழக மகளிரணி தலைவியும் – முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி சிறப்பாளராக கலந்து கொண்டார். முதலாவதாக பல்லவன் நகர் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு பாலபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடை பெற்றதை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து புதுப்பட்டினம் பேருந்து நிலையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமியின் உருவம் பதித்த 70 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்கும், தொன்டர்களுக்கும் வழங்கியதுடன் 500 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலையுடன், ஆட்டோ ஓட்டுனர்கள் 300 பேருக்கு சீறுடைகளை முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார். இதில் மாவட்ட ஒன்றிய நகர கழக மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.