திருவண்ணாமலையில் கண் சிகிச்சை முகாம்
திருவண்ணாமலையில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாமினை மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.;
Update: 2024-06-03 02:05 GMT
திருவண்ணாமலையில் கண் சிகிச்சை முகாம்
திருவண்ணாமலை எஸ்ஆர்ஜிடிஎஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் இன்று மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், தி.மலை ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம், பாண்டிச்சேரி அரவிந்த கண் மருத்துவமனை மற்றும் சம்பத் தேவி தர்மிசந்த் சௌகார் அறக்கட்டளை இணைந்து 200 ஆவது கண் சிகிச்சை முகாமை நடத்தியது. முகாமினை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார் . அப்போது லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.