பொக்லைன் மூலம் கால்வாய் அடைப்புகள் சரி செய்யும் பணி தீவிரம்

சோளிங்கர் பகுதியில் பொதுமக்களின் புகார் இணைத்து கால்வாய் அடைப்புகள் சரி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2024-06-20 01:23 GMT

பொக்லைன் மூலம் கால்வாய் அடைப்புகள் சரி செய்யும் பணி தீவிரம்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் நள்ளிரவு முதல் தொடர்ந்து 3 மணி நேரம் பெய்த மழையின் காரணமாக சாலை மற்றும் தெருக்களில மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. விவசாய நிலத்தில் உள்ள கிணறு மற்றும் நீர்வரத்து கால்வாய்களிலும் தண்ணீர் வந்துள்ளது. மேலும் ஏரிகளுக்கும், குளங்களுக்கும் தண்ணீர் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் நகராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு பகுதியில் செங்குந்தர் புதிய ஒத்தவாடை தெருவில் செல்லும் கால்வாயில் பிளாஸ்டிக் கேன்கள், கவர், டம்ளர் மற்றும் குப்பைகள் அடித்துச் சென்று அடைப்பு ஏற்பட்டது. இதனால் மழைநீர் வெளியேறாமல் சாலைகளிலும் தெருக்களிலும் தேங்கி வீடுகளுக்குள் புகுந்தது. இதுகுறித்து கவுன்சிலர் மோகனாசண்முகத்திடம் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி மற்றும் ஆணையாளர் கன்னியப்பன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார்.அதன்பேரில் பொக்லைன் எந்திரம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் மூலம் சிறுபாலம் பகுதியில் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்த குப்பைகளை அகற்றி கால்வாய் மற்றும் சிறுபாலத்தை சீரமைத்தனர்.
Tags:    

Similar News