ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் கட்டிடம் காணொளி காட்சிவுடன் தமிழர் முதல்வர் திறந்து வைத்தார்...
குமாரபாளையத்தில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் கட்டிடம் காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்...
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையமத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 1500க்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர் ஏற்கனவே உள்ள கட்டிட வளாகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாகவும் மாணவர்களுக்கு கணினி மூலம் பாடம் நடத்துவதற்கு போதிய இடைவெளி இல்லாமையின் காரணமாகவும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கூடுதல் கட்டிடம் கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர் இதன் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சுமார் 85 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது இந்த கட்டிடத்தை கட்டுமான பணி முடிவடைந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் புதிய கல்வி வளாகத்தினை திறந்து வைத்தார் அதனை தொடர்ந்து பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வெங்கடேசன் நகர் மன்ற தலைவர் விஜய கண்ணன் மற்றும் முன்னாள் மாணவர்கள் குத்துவிளக்கு ஏற்றி கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர் இது ஏராளமான முன்னாள் மாணவர்களும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்