நாமக்கல்: உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பில் மருத்துவ முகாம் !

மருத்துவ முகாமில் முதியோர் இல்லத்தில் இருந்த அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. முன்னதாக காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

Update: 2024-11-28 13:12 GMT
தமிழ்நாடு துணை முதல்வரும், விளையாட்டுத் துறை அமைச்சரும், மாநில இளைஞரணி செயலாளர், உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர், மாநிலங்களவை உறுப்பினரும் நாமக்கல் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான KRN. ராஜேஸ்குமார் அறிவுறுத்தலின்படி, மாவட்டம் மருத்துவர் அணி சார்பில் மருத்துவ முகாம் மற்றும் எளியோருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மோகனூர் சாலையில் உள்ள சிவபாக்கியம் முதியோர் இல்லத்தில் நாமக்கல் நகர திமுக செயலாளர் ராணா ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. நாமக்கல் மாநகராட்சி மேயர் து.கலாநிதி முன்னிலை வகித்தார்.மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் மருத்துவர் தீபக்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற மருத்துவ முகாம் நடைபெற்ற மருத்துவ முகாமில் முதியோர் இல்லத்தில் இருந்த அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. முன்னதாக காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மருத்துவர் பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News