துணை முதலமைச்சர் பிறந்தநாள் திமுக மாநகர சார்பில் அறுசுவை உணவு வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

துணை முதலமைச்சர் பிறந்தநாள் திமுக மாநகர சார்பில் அறுசுவை உணவு வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-11-28 14:23 GMT
துணை முதலமைச்சர் பிறந்தநாள் திமுக மாநகர சார்பில் அறுசுவை உணவு வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினரும், திமுகவில் உள்ள பல்வேறு அணிகளை சேர்ந்தவர்களும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டாடி வருகின்றனர். கரூரில் இன்று இரண்டாவது நாளாக மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோனி மலை பாரதிதாசன் நகர் பகுதியில் செயல்படும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர் வசிக்கும் அன்பாலயத்தில், அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி கரூர் மாநகர திமுக செயலாளர் கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், மாநகர மாமன்ற மண்டல தலைவர் கோல்டு ஸ்பாட் ராஜா, கரூர் தெற்கு மாநகர செயலாளர் வழக்கறிஞர் சுப்பிரமணி ,மாமன்ற உறுப்பினர் பாண்டியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளி மாணவ - மாணவியருக்கு அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று வழங்கினர். தங்களது பசி போக்கிய திமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர்.

Similar News