குமாரபாளையம் நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலர் ஆய்வு
குமாரபாளையம், நகராட்சி பகுதிகளில் இன்று நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் மு.ஆசியா மரியம், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, முன்னிலையில் குமாரபாளையம் நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.7.38 கோடி மதிப்பீட்டில் புதியதாக பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு, பேருந்து நிலையம் அமையவுள்ள மொத்த பரப்பளவு, பேருந்து நிறுத்தங்கள், கடைகள் எண்ணிக்கை, இடம்பெற உள்ள பிற வசதிகள் குறித்து கேட்டறிந்து பணிகளை நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டி ஒப்பந்ததாரர் இடமும் நகராட்சி அதிகாரிகளிடமும் அறிவுறுத்தினார். தொடர்ந்து, சந்தைப்பேட்டை நகர்புற ஆரம்ப சுகாதார மையத்திற்க்கு திடீரென சென்றவர் அங்குள்ள நோயாளிகளின் வருகை விபரம், அளிக்கப்படும் சிகிச்சைகள், மழை கால நோய்த்தொற்றுக்களுக்கான மருந்து, மாத்திரைகளை தேவையான அளவு இருப்பு வைத்து கொள்ள மருத்துவ பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், காவிரி நகர் பகுதியில் இயங்கி வரும் அமுதம் நியாய விலைக்கடையில் பொது விநியோகப் பொருட்களின் இருப்பு, விற்பனை விபரம், நியாய விலைக்கடை மூலம் பயன்பெறும் மொத்த குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகள் அடிக்கடி நியாய விலை கடைகள் வந்து ஆய்வு செய்கின்றனர் எனவும் கேட்டு அறிந்தார் . மாவட்ட ஆட்சியருடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டதால் அரசு பணியாளர்களிடையே பெரும் பதற்றம் எழுதியது ஆய்வின் போது குமாரபாளையம் நகர மன்ற தலைவர் விஜய கண்ணன் நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் வட்டாட்சியர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்