இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடும் கண்டனம்

காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Update: 2024-11-28 16:22 GMT
திருப்பூர் மாநகராட்சியில் இன்று மாமன்ற கூட்டம் மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது சொத்து வரி வீட்டு வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் பல மடங்கு உயர்த்தப்பட்டது இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்பொழுது கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தின் போது காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தினர் தாக்குதலுக்கு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடும் கண்டனம் தெரிவித்து தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட செயலாளர் மூர்த்தி விடுத்து உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Similar News