வலிமை வாய்ந்த ஆயுதம் வாக்காளர் அடையாள அட்டை தான் மாவட்ட ஆட்சியர் இளம் வாக்காளர்களுக்கு அழைப்பு.

தங்கள் கைகளில் கிடைக்க பெற்ற வலிமை வாய்ந்த ஆயுதம் வாக்காளர் அடையாள அட்டை அதை சரியாக பயன்படுத்தி இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்கிட வருங்கால இந்தியாவின் தூண்களாகிய இளைஞர்கள் முன்வர வேண்டும். மாவட்ட ஆட்சியர் இளம் வாக்காளர்களுக்கு அழைப்பு.

Update: 2024-11-28 13:31 GMT
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், கீரம்பூர் பி.ஜி.பி செவிலியர் கல்லூரியில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் குறித்த வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி-2025 ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்கள் நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் நடத்தப்பட்டன. நமக்கு இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள சுதந்திரம் வாக்கு சீட்டு மற்றும் வாக்கு மை. நம் அடிப்படை தேவைகளை பூர்த்திட செய்திட நல்ல தலைவர்களை தேர்வு செய்திட நமக்கு கிடைத்த மிக பெரிய உரிமை வாக்களிப்பது ஆகும். தேர்தல் நாள் அன்று வாக்களார்கள் அனைவரும் கட்டாயம் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிட வேண்டும். 01.01.2025 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், அதாவது 31.12.2006 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளாதவர்கள் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் புதியதாக சேர்த்திட வேண்டும். இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடு. மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் தேர்தல் சுதந்திரமாகவும், அமைதியாகவும் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தங்களுக்கு ஏற்ற தலைவரை எத்தகைய கட்டுபாடுமின்றி தேர்ந்தெடுக்க முடிகிறது. கடந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. மேலும், 2026ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இளம் வாக்காளர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்திட தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள பள்ளிகள் மற்றும் வாக்குசாவடி மையங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்றைய தினம் பி.ஜி.பி கல்வி நிறுவனத்தில் 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் குறித்து வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. வாக்காளர் சிறப்பு முகாமில் புதிய வாக்களார்கள் பெயர் சேர்த்தல், வாக்களார் அட்டையில் திருத்தம் உள்ளிட்டவற்றை இணையதளம் வாயிலாக கணினி மற்றும் கைபேசியில் மேற்கொள்ள அரசுத்துறை அலுவலர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளார்கள். மேலும் Voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், "Voter helpline" என்ற கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். வாக்காளர்கள் தங்கள் பதிவினை உறுதி செய்ய 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். இன்றைய தினம் தங்கள் கல்லூரியில் 18 வயது பூர்த்தியடைந்தவர்களின் ஆதார் அட்டை, 10,12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் புகைபடம் உள்ளிட்ட விபரங்கள் பதிவு செய்யப்பட்டு, தங்கள் வீடுகளுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்பட உள்ளது. இது ஜனநாயத்தின் மிகப்பெரிய வெற்றி ஆகும். தேர்தல் நாள் அன்று அனைவரும் கட்டாயம் வாக்களித்து, தங்கள் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களையும் வாக்களிக்க ஊக்குவித்திட வேண்டும். தங்கள் கைகளில் கிடைக்க பெற்ற வலிமை வாய்ந்த ஆயுதம் வாக்காளர் அட்டை அதை சரியாக பயன்படுத்தி இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்கிட வருங்கால இந்தியாவின் தூண்களாகிய இளைஞர்கள் முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்று கொண்டனர். மேலும். 18 வயது நிரம்பிய இளம் வாக்காளரிடம் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்த்தல் விண்ணப்பத்தை பெற்று கொண்டார். இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, கல்லூரி மாணவியர்கள், பேராசிரியர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News