ஆசிரியர் நியமன தேர்வுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் புறக்கணிப்பு.

எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியிடம் மனு

Update: 2024-07-20 12:35 GMT
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சியான 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, நியமன தேர்வில் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கினர். பட்டய ஆசிரியர் பயிற்சி மட்டுமே போதுமானது. பட்டப்படிப்பானது அதிக கல்வி தகுதி என்று காரணம் காட்டி பட்டதாரி ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக வேதனை. நாளைய தினம் நியமனத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஈவினத் தேர்வை நிறுத்தி வைக்க வேண்டும். அல்லது பட்டதாரி ஆசிரியர்களுக்கு என தனி நியமன தேர்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை.

Similar News