ஆரணி அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தினவிழா.
ஆரணி,6 ஆரணி அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.
ஆரணி சிஎஸ்ஐ மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றதில் பள்ளி தாளாளர் டாக்டர் வி.தியாகராஜன் தலைமை தாங்கினார். அருட்தந்தை ஆசைதம்பி பிரார்த்தனை செய்து ஆசிரியர்களை வாழ்த்தினார்.. கோட்டை ரோட்டரிசங்கத்தின் முன்னாள் செயலாளர் கோகுல்ராஜ் ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பள்ளி முதல்வர்.எஸ்.ரோஸ்லின்ஞானமணி அனைவரையும் வரவேற்றார். அனைத்து ஆசிரியர்களையும் கௌரவிக்கப்பட்டனர். மாணவர்களின் கலாச்சார நிகழ்ச்சிகள் நடந்தன. ஆரணி அடுத்த பத்தியாவரம் சூசை நகரில் உள்ள புனித வளனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா டாக்டர் ஜெ ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. ஆரணி அரிமா சங்க துணை ஆளுநர் உதயசூரியன், அரிமா சங்க செயலாளர் மோசஸ், செயலாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையிலும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு . சிறப்பு விருந்தினர்களாக அருட்பணியாளர்கள், லாசர் வேளாங்கண்ணன், பிரேம்குமார், கிரகோரி மற்றும் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பத்தியாவரம் அன்புதாஸ், இப்பள்ளியின் முன்னாள் ஆசிரியர்கள் ஜார்ஜ் பீட்டர், வெங்கட சுப்பு ஆகியோர் கலந்து கொண்டார்கள். முன்னதாக தாளாளர் சகோ.பெனடிக்ட், தலைமைஆசிரியர் முனைவர். மதலைமுத்து ஆகியோர் அனைத்து ஆசிரியர்களையும் பேண்ட் வாத்தியங்கள் இசைத்து அழைத்து வந்தனர். பிறகு ஆசிரியர்களை வாழ்த்தி,பேசி அனைவருக்கும் பொன்னாடை போர்த்தப்பட்டு அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை பி.ஆரோக்கியசெல்வம்,எம் தீபக்,ஆகியோர் தொகுத்துவழங்கினர். எஸ்.எழில் ராஜன் நன்றி கூறினார்.