ராமநாதபுரம் மீனவ பெண்கள் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவப் பெண்களை குறி வைத்து சுமார் ரூ 300 கோடி ரூபாய் வரை தங்க நகை அடகு மோசடி செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து - நகைகளை திரும்ப மீட்டுத் தர வலியுறுத்தி ஏராளமான பெண்கள் போராட்டம் இல்லையேல் ஆட்சியர் அலுவலகத்தில் உயிரை மாய்த்துக் கொள்ளுவோம் என ஆவேசம்,

Update: 2024-07-22 12:46 GMT
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி நம்புதளை, மோர் பண்ணை, முள்ளி முனை உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட மீனவர் கிராம பெண்களிடம் தங்க நகை அடகு வைத்து கூடுதலாக பணம் தருவதாக மோசடியான வார்த்தைகளை கூறி ஒவ்வொரு பெண்களிடமும் 20 பவுண், 30 பவுண் என்று சுமார் 300 கோடி ரூபாய் வரை மீனவர் பெண்களிடம் மோசடி செய்துள்ளனர் இவர்களிடம் உரிய விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பணத்தையும் நகைகளையும் மீட்டு தர வேண்டும் எனவும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இது போன்ற மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட செல்வி பைனான்ஸ் நிறுவனத்தினர் மீது உறிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங், மற்றும் சரக காவல்துறை துணைத் தலைவர் துரை, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஸ் ஆகியவர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தனர் அப்போது காதில் பூ சுற்றிக்கொண்டு மனு கொடுத்தனர் அதன் பின்பு பெண்கள் கூறுகையில் மீனவர்களின் உழைப்பில் சேகரித்த பணம் நகைகள் செல்வி கோல்டு ஃபைனான்ஸ் நிறுவனத்தால் பரி போயிள்ளது இது தொடர்பாக 50க்கும் மேற்பட்ட முறையில் மனு கொடுத்தும் இதுவரை எந்தவிதமான பலனும் இல்லை நடவடிக்கையும் இல்லை ஆகையால் பாதிக்கப்பட்ட அனைத்து மீனவ பெண்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி உயிரை மாய்த்துக் கொள்ளும் நிகழ்வைத் தவிர வேற வழி இல்லை என ஆக்ரோசமாக அழுது கொண்டு தங்களது வேதனைகளை தெரிவித்தனர் இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News