ராமநாதபுரம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ராமநாதபுரத்தில் மாவட்ட கழகம் சார்பில் அரிக்கேன் விளக்குகளை கைகளில் ஏந்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு.

Update: 2024-07-23 06:46 GMT
சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி K.பழனிச்சாமி ஆணைக்கிணங்க, தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியும், நியாய விலைக்கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் விடியா தி.மு.க. அரசைக்கண்டித்து, இளைஞர் பாசறை செயலாளர் பால்பாண்டியன் ஏற்பாட்டில் மாவட்ட கழகம் சார்பில் எம்.ஏ.முனியசாமி தலைமையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ராமநாதபுரம் நகர் புதிய பேருந்து நிலையம் அருகில் பஸ் டிப்போ முன்பு நடைபெற்றது. இன்றைக்கு திமுக அரசு சொத்து வரி உயர்வு ,குப்பை வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு ,மின்சார கட்டண உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு என்று வருகிறது. ஆனால் ஆட்சி உயரத்தை பறைசாற்றுவதாக விளம்பரம் செய்வதிலேயே அரசு அக்கறை செலுத்தி வருகிறது. அதே போல, 2024 ஏப்ரல் முதல் ரேசன் கடைகளில் சமையல் எண்ணெய், பருப்பு போன்றவற்றை வழங்கப்படவில்லை. ஆகவே மின் கட்டணத்தை உயர்வை கண்டித்தும், ரேஷன் கடைகளில் பருப்பு, சமையல் எண்ணெய் வழங்காதை கண்டித்தும், ராமநாதபுரம் உள்பட தமிழக முழுவதும் உள்ள கழக அமைப்பு ரீதியாக 82 மாவட்டங்களில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது . இதில்,இதில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா,மாநில மகளிரணி செயலாளர் கீர்த்திகா முனியசாமி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, மணிகண்டன், ராமநாதபுரம் நகர் கழக செயலாளர் பால்பாண்டியன், மண்டபம் ஒன்றிய செயலாளர் மருதுபாண்டி உள்ளிட்ட மூத்த கட்சி நிர்வாகிகளும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பங்கேற்றனர்.

Similar News