ராமநாதபுரம் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

ராமநாதபுரம் அருகே உள்ளஅழகன்குளம் கிராம பொதுமக்கள் டாஸ்மாக் கடையை அடியோடு அகற்ற கோரிக்கை.

Update: 2024-07-23 07:45 GMT
ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் ஊராட்சியில் இயங்கி வரும் அரசு மதுபான கடையால் பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுவதாக புகார் கூறிய பொதுமக்கள் அந்த மதுபான கடையை முற்றிலுமாக அகற்றி தர வேண்டும் என, இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர் கூட்டத்தில் ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அழகன்குளம் ஊராட்சி 'நாடார் வலசை' பகுதியில் கடை எண் 7003 என்ற டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அங்கு மது அருந்த வருபவர்களால் பல இன்னல்களை மக்கள் அனுபவித்து வருகிறார்கள். மதுக்கடை அருகில் அங்கன்வாடி மையம், சூப்பர் மார்க்கெட், தனியார் மேல்நிலைப்பள்ளி, முருகன் கோவில், திருமண மண்டபம் மற்றும் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. அது சமயங்களில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை தனியாக பள்ளிக்கு அனுப்ப அச்சமாக உள்ளது. கோவில் அருகே குடித்துவிட்டு மது பிரியர்கள் அருவருக்க தக்க நிலையில் அந்த பகுதியில் படுத்து கிடக்கிறார்கள். கோவிலுக்கு செல்லவும் அச்சமாக உள்ளது. அங்கு பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு தாய்மார்கள் உணவு கொண்டு செல்லும் மதிய வேளையிலும் மது பிரியர்களால் பெரும் இடையூறு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி பள்ளிக்கு செல்லும் வளைவுபகுதியில் சூப்பர் மார்க்கெட் அருகிலும் குடித்துவிட்டு வாகனத்தை கண்மூடித்தனமாக இயக்குவதால் விபத்து ஏற்படுகிறது.மேலும், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாலியல் ரீதியாக தொல்லை நடக்கிறது. தனியாகச் செல்ல மிகவும் அச்சமாக உள்ளது. எனவே அந்த பகுதியில் இயங்கி வரும் அந்த அரசு டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அந்த பொதுமக்கள் இன்று ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். இது குறித்து பேசிய பகுதி பெண் கூறுகையில், இரவு நேரத்தில் கதவை தட்டி மது அருந்த தண்ணீர் கேட்கிறார்கள். சட்டவிரோதமாக நள்ளிரவு நேரத்திலும் விற்பனையாகும் மது பாட்டிலுக்கு கதவை தட்டி தண்ணீர் மிக்ஸிங் பண்ணுவதற்கு தண்ணீர் கேட்டு எங்களை தொந்தரவு செய்கிறார்கள் என வேதனை தெரிவித்தனர்.

Similar News