ராமநாதபுரம் வழக்கத்துக்கு மாறாக உள்வாங்கிய கடல்

பாம்பன் தெற்கு கடல் 200 மீட்டர் உள்வாங்கியது கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டு படகுகள் தரை தட்டி சேதம்.

Update: 2024-07-23 11:43 GMT
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 200 மீட்டருக்கு அதிகமாக கடல் உள்வாங்கியுள்ளதால் கடற்கரை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டு படகுகள் தரை தட்டி சேதமடைந்தது. கடல் நீர் உள்வாங்கியதால் கடற்கரை ஓரமுள்ள நண்டு சங்கு சிற்பி உள்ளிட்டவைகள் வெளியே தெரிந்தன. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், அடுத்த சின்னப்பாலம், தோப்புகாடு, தெற்வாடி தெற்று கடல் பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக சுமார் 200 மீட்டருக்கு மேல் கடல் உள்வாங்கியது. இதனால் அப்பகுதியில் அரிய வகை பவளப்பாறைகள், நட்சத்திர மீன்கள், கடல் அட்டைகள் உள்ளிட்டவை கடலில் இருந்து வெளியில் தெரிந்தன. மேலும் பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டு படகுகள் மற்றும் பைபர் படகுகள் தரை தட்டின. இதனால் மீன் பிடிக்க செல்லும் நாட்டு படகு மீனவர்கள் கடலில் நடந்து சென்று படகுகளை கடலுக்குள் இழுத்து சென்று பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினர். கடல் உள்வாங்கும் நேரங்களில் கடற்கரையில் தரைதட்டி நிற்கும் மீன்பிடி படகுகளை கடல் நீர் பெருக்கெடுக்கும் வரை மீனவர்கள் காத்திருந்து மீனவர்கள் படகுகளை மீட்டு வருகின்றனர். இதனால் மீனவர்கள் மீன் பிடி செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதேபோல் பாம்பன் சாலை பாலம் மற்றும் பழைய ரயில் பாலம் பகுதிகளிலும் கடல் நீர் உள்வாங்கியதால் கடற்கரை ஓரமுள்ள சங்கு மற்றும் பவளப்பாறைகள் வெளியே தெரிந்த வருகிறது. மேலும் ஆடி மாதங்களில் இவ்வாறு கடல் உள்வாங்குவது அடிக்கடி நிகழ்ந்து வருவதாக அப்பகுதி மீனவ மக்கள் தெரிவிக்கின்றனர்.

Similar News