ராமநாதபுரம் மீனவர்கள் சிறை பிடிப்பு

ராமேஸ்வரம் மீனவர்களின் இரண்டு விசைப்படகு ஒன்பது மீனவர்களை இலங்கை கடற்படை நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் ராமேஸ்வரம் மீனவர்கள்

Update: 2024-07-23 11:46 GMT
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர் இந்நிலையில் இன்று மீனவர்கள் சர்வதேச கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நெடுந்தீவு அருகே INT TN - 10 MM- 284 என்ற எண் கொண்ட செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகும் INT TN - 10 - Mm - 2517 என்ற எண் கொண்ட ஈசாக் ராபின் என்பவருது விசைப்படகையும் நெடுந்தீவு அருகே சுற்றி வளைத்த இலங்கை கடற்படை அதில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒன்பது மீனவர்களை கைது செய்து காங்கேஷன் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறது விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைக்கு ராமேஸ்வரம் மீனவர்கள் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர் மேலும் இலங்கை கடற்படை கைது செய்துள்ள ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த இரண்டு விசைப்படகையும் 9 மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் இதுவரை இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் விசைப்படகுகளையும் மீட்க மத்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் தெரிவிக்க வேண்டும் என ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்கத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Similar News