மின்கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரிய கையெழுத்து கோப்புகள்
கலெக்டர் அலுவலகத்தில் கெடுத்த த.மா.கா.வினர்
சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட த.மா.கா. சார்பில் மாவட்ட தலைவர்கள் வக்கீல் எஸ்.செல்வம் (புறநகர்), கே.எம்.உலகநம்பி (மாநகர்), கரு.வெ.சுசீந்திரகுமார் (மேற்கு), வி.எம்.சொக்கலிங்கம் (கிழக்கு) ஆகியோரது தலைமையில் மாநில பொதுச்செயலாளர் எம்.பி.எஸ்.குலோத்துங்கன், மாநில இணை செயலாளர் எம்.சின்னதுரை மற்றும் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், தமிழக அரசு 3-வது முறையாக உயர்த்தியுள்ள மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரியும், வலசையூரில் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்க கோப்புகளையும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் வழங்கினர். அதனை முதல்- அமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யும்படி கூறினர். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் விஷ்ணுகுமார், நாகராஜ், நல்ல சீனிவாசன், தனபால், அன்பு, ரோஸ், செல்லம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.