அருகே ஆடிபௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு அரிவாளில் ஏறி நின்று அருள்வாக்கு!

பக்தி

Update: 2024-07-25 11:52 GMT
அறந்தாங்கி அருகே ஆடிபௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு அரிவாளில் ஏறி நின்று அருள்வாக்கு கருப்பசாமியிடம் ஆசிபெற நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம்* புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மீமிசல் குடியிருப்பு பகுதியில் பிரசித்தி பெற்ற வழிவிடும் கருப்பசாமி ஆலயத்தில் ஆடி பௌர்ணமி திருவிழா சிறப்பாக நடைபெற்றது திருவிழாவில்கடந்த ஒரு வாரமாக விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் ஏம்பக்கோட்டை ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் ஆலயத்தில் இருந்து பால்குடம் மற்றும் பறவை காவடி அலகுகாவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கருப்பசாமி கோவிலை வந்தடைந்தனர். அங்கு கருப்பசாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற நிலையில் தொடர்ந்து கருப்பசாமி அரிவாள் மீது நின்று அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் கோயில் பூசாரி மாதவன் அரிவாள் மீது நின்று சாமி வந்து ஆடி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார் விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அருள்வாக்கு பெற்றுச் சென்றனர்.

Similar News