கரூர் மாவட்டத்தில் 19.60 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு.

கரூர் மாவட்டத்தில் 19.60 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு.

Update: 2024-11-18 03:10 GMT
கரூர் மாவட்டத்தில் 19.60 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு. வங்கக் கடலில் எதிர்பார்த்தபடி காற்றழுத்து தாழ்வு பகுதி உருவாகுவதில் தாமதம் ஏற்பட்டது. ஒரே சமயத்தில் எதிர் எதிர் திசைகளில் காற்று வீசுவதால் ஏற்பட்ட மாற்றத்தால் கனமழைவாய்ப்பு தாமதமானது. அடுத்து வரும் வாரங்களில் இந்த சூழல் மாறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அதே சமயம் தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டத்தில் நேற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இருந்த போதும் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளது. பெய்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு செய்துள்ளது.அந்த அறிவிப்பில், கரூரில் 1.00 மில்லி மீட்டர், அரவக்குறிச்சியில் 2.00 மில்லி மீட்டர், க.பரமத்தியில் 1.00 மில்லி மீட்டர், கிருஷ்ணராயபுரத்தில் 5.00 மில்லி மீட்டர், பஞ்சபட்டியில் 2.60 மில்லி மீட்டர், கடவூரில் 8.00 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 19.60 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 1.63 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News