காங்கேயத்தில் ஆதரவற்ற இறந்தவர்களின் சுடலத்தை அடக்கம் செய்யும் தன்னார்வலர்கள்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் ஆதரவற்றவர்கள் இறந்த நிலையில் அவர்களின் சடலத்தை காவல் துறையில் மேற்பார்வையில் நல்லடக்கம் செய்யும் பசியை போக்குவோம் என்ற தன்னார்வலர்கள் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே நீலக்காட்டுப்புதூர் பகுதியில் 13ம் தேதி அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்தார்.அவரின் சடலத்தை மீட்டு காங்கேயம் காவல்துறையினர் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அவரின் பெயர் மற்றும் உறவினர் யாரையும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் காங்கேயம் காவல்துறையினர் பசியை போக்குவோம் அறக்கட்டளை நண்பர்களை கேட்டுக்கொண்டதற்கு இணங்க பசியை போக்குவோம் அமைப்பினர் ஆட்டோ சரவணன்,தர்ஷன் மற்றும் அன்பழகன் அவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனை சென்று உடற்கூறாய்வு செய்த உடலை பெற்று காங்கேயம் கொண்டு வந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரின் நல்லடக்கம் பணியில் அறக்கட்டளை நண்பர்கள் ஆட்டோ சரவணன்,ஜாகிர்,திலீப், பீடாமணி,செல்வம்,பாபு மற்றும் அன்பு ஆகியோர் கலந்து கொண்டனர். அவரின் நல்லடக்க செலவினை முழுமையாக சுபாஷ் வீதி ஜெயக்குமார் அவர்கள் ஏற்றுக் கொண்டார். களப்பணியாற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் பசியை போக்குவோம் அமைப்பு சார்பில் நன்றி தெரிவித்தனர். மேலும் அடையாளம் தெரியாத மற்றும் சொந்தம் யாரும் இல்லாத இறந்த நபர்களை அடக்கம் செய்வதில் காங்கேயம் பகுதியில் காங்கேயம் பசியை போக்குவோம் அமைப்பினர் சிறப்பாக செயல்படுவதாக பொதுமக்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.