கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 300 பெண்கள் வள்ளி கும்மி நடனமாடினர்.

குமாரபாளையம் அருகே கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 300 பெண்கள் வள்ளி கும்மி நடனமாடினர். இதில் மூன்று வயது பெண் குழந்தை நடனம் ஆடியது அனைவரையும் கவர்ந்தது.

Update: 2024-11-17 17:16 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள குட்டி கிணத்தூர் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு, அப்பகுதியினை சேர்ந்த பெண்கள், வள்ளி கும்மி நடனம் ஆடினர். இதில், முருகனின் வள்ளி கும்மி பாடலை பாடி அதற்கு தகுந்தவாறு 300க்கும் மேற்பட்ட பெண்கள் நடனமாடினர். அனைவரும் ஒரே பச்சை வண்ணத்தில் சீருடையாக உடை அணிந்து ஆடியது அனைவரையும் கவர்ந்தது. மேலும் இந்த வள்ளி கும்மி ஆட்டத்தில் மூன்று வயது பெண் குழந்தை பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடி காண்போரை பெரிதும் கவர்ந்தது.

Similar News