நடுசாலையில் போதை ஆசாமி நடனம்

குமாரபாளையத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம். ஆர்ப்பாட்டத்தின் பொழுது மது பிரியர் சாலையின் நடுவே விஜயகாந்த் பாடலின் இசைக்கு தகுந்தவாறு நடனமாடி அசத்தல்

Update: 2024-07-25 12:37 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நாமக்கல் வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் தமிழக அரசின் மின்சார கட்டண உயர்வினை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் விஜய் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கட்சியினர் கலந்து கொண்டு தமிழக அரசினை கண்டித்து கண்டன கோசங்கள் எழுப்பினர். தேமுதிகவினரின் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்த பிறகு தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் நடித்த திரைப்படங்களில் இருந்து பாடல்கள் ஒளிபரப்பப்பட்டது. இந்த பாடல்களுக்கு தகுந்தவாறு மது பிரியர் ஒருவர் நகரின் முக்கிய சாலையில் நடனமாடி பொதுமக்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தினார்.

Similar News