சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் வனச்சாலை அமைப்பது தொடர்பாக வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் நேரில் ஆய்வு.
வனச்சாலை அமைப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன்
மதுரைமாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் வனச்சாலை அமைப்பது தொடர்பாக வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் நேரில் ஆய்வு. மதுரை மாவட்டம், சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் வனச்சாலை அமைப்பது தொடர்பாக வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சில பகுதிகளில் பல ஆண்டுகளாக வனச்சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாகவும், அப்பகுதிகளில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு வனச்சாலை அமைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ. வெங்கடேசன் கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட விக்கிரமங்கலம்-காடுப்பட்டி, வைகாசிபட்டி-சாத்தையாறு அணை, முடுவார் பட்டி-சால்வார்பட்டி, பாலமேடு-வேம்பரளி வரை அமைந்துள்ள வனத்துறை சாலைகள் அமைப்பது தொடர்பாக இன்று நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு வனத்துறை விதிகளுக்கு உட்பட்டு இப்பகுதியில் வனச்சாலை அமைப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் மாசௌ.சங்கீதா, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) டாக்டர்.மோனிகா ராணா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் வனத்துறை அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.