அருள்மிகு ஸ்ரீபகவதி அம்மன் கோவில் ஆடி திருவிழா!

பகங

Update: 2024-07-26 02:42 GMT
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள பரம்பூர் தெற்கு முஸ்லிம் தெருவில் அமர்ந்துள்ள அருள்மிகு ஸ்ரீபகவதி அம்மன் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு 5-ம் மண்டகப்படிதாரர்கள் இஸ்லாமியர்கள் (பட்டாளத்தார்கள்) சார்பில் இன்று மதியம் 5000 பேருக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்படுகிறது புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகில் உள்ள பரம்பூரில் முஸ்லிம் தெருவில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது . இந்த கோவிலில் பக்தர்களால் ஆண்டுதோறும் ஆடித்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம் திருவிழாவின் போது பல்வேறு சமூகத்தினரால் மண்டகப்படி அம்மன் அலங்காரம் வீதி உலா கலை நிகழ்ச்சி 9 நாட்கள் நடைபெறும் இதே போல் 5ம் ஆண்டு மண்டகப்படி பட்டளாத்தார் மண்டகபடி பெயரில் இஸ்லாமியர்கள் சார்பில் கொண்டாடப்படுவது வழக்கம் இந்த ஆண்டும் இஸ்லாமிய சமூகத்தினரால் பகவதி அம்மனுக்கு மாலை மற்றும் பூஜை அபிஷேக பொருட்கள் வாங்கிக் கொடுத்து அன்னதானமும் வழங்கப்பட்டது இந்த அன்னதான விழாவில் கோவில் அருகே தனி பந்தல் அமைத்து கோயிலுக்கு வந்த பக்தர்களை வரவேற்று ஆயிரக்கணக்கானோருக்கு மதியம் வடை பாயாசம் சாம்பார் மிளகு ரசம் தக்காளி கூட்டு என அனைத்து வகை காய்கறிகள்உள்ளிட்ட அறுசுவை விருந்து வழங்கப்பட்டது கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் அம்மனை வழிபாடு செய்து மன மகிழ்ச்சியோடு இஸ்லாமியர்கள் வழங்கிய அன்னதானத்தையும் சாப்பிட்டு வாழ்த்தி சென்றனர் இந்த நிகழ்ச்சி சமூக ஒற்றுமையையும் மத நல்லிணக்கத்தையும் பேணுவதாக அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர் இத்தகைய நிகழ்வுகள் எங்கள் பகுதியில் ஆண்டுதோறும் நடப்பது பெருமையாக உள்ளது என மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்

Similar News