அன்னவாசல் போலீசார் நேற்று காரசூரான்பட்டி ஆற்றுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மாட்டு வண்டியில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மணல் கடத்திவந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீசார் அதன் உரிமையாளர்கள் காரசூரான்பட்டியை சேர்ந்த அய்யாக்கண்ணு (65) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.