மதுவிலக்கு வழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கு ஆலோசனை கூட்டம்
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் மதுவிலக்கு வழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் மதுவிலக்கு வழக்கில் தண்டனை பெற்ற நபர் ஒருவர், மன உளைச்சலில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது போல் இனி நடக்க கூடாது எனும் வகையில், அவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடத்தி ஆலோசனை வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி போலீஸ் ஸ்டேஷனில் மதுவிலக்கு வழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இவர் பேசியதாவது: மது விலக்கு வழக்கில் தண்டணை பெற்று தற்போது திருந்தி வாழ்பவர்களுக்கு அரசாங்கத்தால், மறு வாழ்வுக்கான பணம் 50 ஆயிரம் ரூபாய் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பவர்களுக்கு பரிந்துரை செய்து பெற்றுத் தரப்படும் . வாழ்வாதாரத்திற்கு வேண்டிய அனைத்து உதவிகளும் தமிழக அரசின் உத்திரவின் பேரில் காவல் துறை மூலம் பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார். இதில் எஸ்..ஐ.க்கள் தங்கவடிவேல், பழனிசாமி, உள்பட பலர் பங்கேற்றனர்.