இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆலோசனை கூட்டம்
ஒன்றிய அரசின் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை வஞ்சித்ததை கண்டித்து, குமாரபாளையத்தில் இடதுசாரி கட்சியின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஒன்றிய அரசின் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை வஞ்சித்ததை கண்டித்து, குமாரபாளையத்தில் இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஒன்றிய அரசின் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை வஞ்சித்ததை கண்டித்து இடதுசாரி கட்சிகள் ஆகஸ்ட் 1 மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெறுவதையொட்டி, குமாரபாளையத்தில் இடதுசாரி கட்சியின் ஆலோசனை கூட்டம் சி.பி.எம். நகர அலுவலகத்தில் சி.பி.எம். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோகன் தலைமையில் நடந்தது. இதில் சி.பி.ஐ நகர செயலாளர் கணேஷ் குமார், சி.பி.ஐ.எம்.எல். மாவட்ட செயலாளர் பொன் கதிரவன், ஒன்றிய பொறுப்பாளர் வெங்கடேசன், நகர பொறுப்பாளர் முருகன், சி.பி.எம். நகர செயலாளர் சக்திவேல், மாவட்ட குழு உறுப்பினர் எம்.ஆர்.முருகேசன், முன்னாள் நகர செயலாளர் ஆறுமுகம், நகர குழு உறுப்பினர்கள் கந்தசாமி, சரவணன், மாதேஷ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் முன்னணி தலைவர்கள் பங்கேற்றனர். ஆகஸ்ட் 1 குமாரபாளையம் ஸ்டேட் வங்கி முன்பு காலை 10:30 மணிக்கு மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.