ரேசன் கடைகளில் எண்ணெய், துவரம் பருப்பு சீராக வழங்க கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் ரேசன் கடைகளில் முறையாக சமையல் எண்ணெய், துவரம் பருப்பு வழங்க வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ரேசன் கடைகளில் முறையாக சமையல் எண்ணெய், துவரம் பருப்பு வழங்க வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். பின்னர் அவர்கள் அளித்த மனுவில், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைதிட்டத்தில் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் முழுமையாக வேலை வழங்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகள் கடந்த மூன்று மாதங்களாக சமையல் எண்ணெய், துவரம்பருப்பு முறையான வினியோகம் நடைபெறவில்லை. இதனால் எழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளி சந்தையிலும் பருப்பு உள்ளிட்ட அத்தியவசிய பொருள்களின் விலை உச்சந்தை தொட்டு உள்ளது. இதனால் ஏழை நடுத்தர மக்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.