மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி சேலம் கோட்டை பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் ராமன், கந்தன், பொருளாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் தமிழ்நாடு அரசு உயர்த்திய மின் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.